• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கிராமசபை கூட்டங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்..,

மதுரை மாவட்ட சட்டப் பணி ஆணை குழு மற்றும்தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக ஜாங்கிரிட் உறுப்பினருடன் இணைந்து வாடிப் பட்டி,அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிமன்றங் களில் நடந்த காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சட்ட விழிப்பு ணர்வு பிரச்சாரம் செய்யப் பட்டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கல்வியின் முக்கியத்துவம் ,போதை தடுப்பு, குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் பற்றி எடுத்துக் கூறியும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதில் வழக்கறிஞர்கள் செம்மினிபட்டி செல்வகுமார்,பூச்சம்பட்டி பரமசிவம், அழகாபுரி சீனிவாசன், ஆதனூர் ராமகிருஷ்ணன்,நெடுங்குளம் ஸ்மிதா மற்றும் சட்ட தன்னார்வளர்கள் திருவாளவாய நல்லூர் பொன். பனகல்பொன்னையா, ராயபுரம் தமிழ் முருகன்ஆகியோர் கலந்து கொண்டுசட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதன் ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர் கவிதா செய்திருந்தார்.