• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 2, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இந்த கோவிலுக்கு வெள்ளி செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு முன்பாகவும் அருகிலும் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் முதல் பெரிய கடை வீதி வரை உள்ள பகுதிகளில் இருபுறமும் ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகள் குறுகலாக இருப்பதால் பேருந்துகள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு இடதுபுறத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கடைகள் முன்புறம் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கோவில் பகுதிகளில் தினசரி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதுடன் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கோவில் முன்பு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிக அளவில் நிறுத்துவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். ஆகையால் சோழவந்தான் காவல்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்தினர் நெடுஞ்சாலை துறையினர் வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.