விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் அக்னி மாலை காரியம்மன் கோவில் உள்ளது.

சக்தி பீடத்தில் வெற்றி வராகி அம்மன் தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக அகல் விளக்கு பூஜை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மாரியப்பன் பூசாரி செய்து இருந்தார்.




