• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கள்ளிக்குடி தனியார் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி..,

ByKalamegam Viswanathan

Sep 27, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தனியார் பள்ளி வளாகத்தில், ஐந்து மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது .இதில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.

திருமங்கலம் அருகே கள்ளிக்குடி தனியார் பள்ளியில் உலக சிலம்பாட்ட கழகம் மற்றும் முதல் சிலம்பாட்ட பள்ளி சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, தொடுமுறை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.இதில் ஆறு வயது சிறுமி சிலம்பாட்ட விளையாட்டை கண் சிமிட்டும் நேரத்தில் படு வேகமாக சுழற்றிய காட்சி அனைவரின் கண்களையும் ஈர்த்தன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என 4 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் தேர்வாகும் மாணவர்கள் வரும் நவம்பர் 29-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். தேசிய போட்டிக்கு பிறகு சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெறும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.