• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஒமைக்ரான் அறிகுறிகள் என்ன? மீண்டு வந்தவர் விளக்கம்

Byகாயத்ரி

Dec 29, 2021

சளி, காய்ச்சல் மட்டுமே மூன்று நாட்களுக்கு இருந்ததாகவும் தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பிவிட்டனர்.தமிழ்நாட்டில் இரண்டாவது நபராக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து திரும்பிய அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மேலும் நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் ஒமைக்ரான் பாதிப்பு இருந்த போது என்ன மாதிரியான அறிகுறிகள் இருந்தது என கூறியுள்ளார். அதன்படி, முதல் இரண்டு நாட்கள் தொண்டை எரிச்சல் இருந்தது, அடுத்த நாள் சளி ஏற்பட்டது. அதன் பின் காய்ச்சல் 101, 102 டிகிரி இருந்தது என கூறியுள்ளார்.

காய்ச்சலுக்கான அடிப்படை மருந்துகள் தரப்பட்டன. ஒரு நாளில் காய்ச்சல் சரியாகிவிட்டது. ஆக்சிஜன் அளவு 98 இருந்தது என கூறியுள்ளார். ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் யாரும் பயப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.சாதாரண அறிகுறிகள் தான் ஏற்பட்டன. அரசு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.