மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், புதுக்கோட்டை சிங்கப்பூர் TVS மஹாலில் நடைபெற்றது, மக்கள் தேசம் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அ.ஆசைதம்பி தலைமையில், பொதுச்செயலாளர் வேதமணி முன்னிலையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள SC/ST நீதிமன்றத்திற்கென நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும்.

2.) தொடர்ந்து பட்டியலின மக்கள் மீது நடைபெறும் கொலை மற்றும் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவித்து, போர்கால அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
3.) பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பட்டியலின மக்களுக்கே செலவிட வேண்டும், வேறு திட்டங்களுக்கு செலவிட கூடாது.

4.) சாதிவாரி கணக்கெடுப்பில் சமூக மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தெம்மாவூர் நந்தன் நன்றியுரை நிகழ்த்தினார்.



