• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

இணையத்தில் வைரலாகும் ஜோ – சூர்யா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் இணைந்த ஜோடி, சூர்யா – ஜோதிகா! இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தொடர்ந்து மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்தனர். கிட்ட தட்ட நான்கு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதம் பெற்று, கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் நடிப்பில் வெளியான, ‘காக்க காக்க’ திரைப்படத்தில், அன்புசெல்வன் – மாயாவாக ரீல் காதல் ஜோடிகளாக மட்டும் இல்லாமல் ரியல் காதலர்களாகவே வாழ்ந்து நடித்தனர். இந்தப்படத்தை தொடர்ந்து, இவர்கள் இணைந்து நடித்த மற்றொரு ஜோடி ஹிட் படம், அது சில்லுனு ஒரு காதல். இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் திரைப்படம் இது!

இந்நிலையில், தற்போது மும்பை சென்றுள்ள சூர்யாவும், ஜோதிகாவும் அங்குள்ள சாலையில் ஜோடியாக வாக்கிங் சென்றபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.