• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தாய்மாமன் தங்க மோதிரம் பாதுகாப்பு பெட்டகம் கழிப்பறைகளின் நிலை குறித்தும் உமா ஐ.ஏ.எஸ். ஆய்வு..,

ByP.Thangapandi

Sep 19, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 28- ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.,

இதில் முதல்வர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தாய் மாமன் தங்க மோதிர திட்டம் வரும் 28ஆம் தேதி தொடக்கம்.,

இதில் ஜூன் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.,

இந்நிலையில் திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் வருகை தர உள்ள சூழலில், இன்று உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர் உமா ஐ.ஏ.எஸ். தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.,

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைக்கும் மேடை அமைய உள்ள இடம், பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள தாய்மாமன் தங்க மோதிரம் பாதுகாப்பு பெட்டகம், வார்டு பகுதி மற்றும் அங்கு உள்ள கழிப்பறைகளின் நிலை குறித்தும் உமா ஐ.ஏ.எஸ். ஆய்வு மேற்கொண்டார்.,

தொடர்ந்து மருத்துவத்துறை, வருவாய்த்துறை மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.,