• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குட்லாடம்பட்டியில் பெரியார் பிறந்த நாள் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சோழவந் தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட இணை செயலாளர் பொன்ராமலிங்கம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக்,
ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு, வழக்கறிஞர் தியாகராஜன், கார்த்திக், ரோகித், ராகுல், நந்தகோபால், மகளிரணி செயலாளர் சுஜா, பங்களா மூர்த்தி, மதுசூதனன், ராஜேந்திரன், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளைச் செயலாளர் வனராஜா நன்றி கூறினார்.