• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சக்கையநாயக்கனூரில் குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்..,

ByPuthar Pandian P

Sep 17, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஜம்புதுரைக் கோட்டை ஊராட்சியில் சக்கையநாயக்கனூர் காமலாபுரம், அழகம்பட்டி, ஜல்லிப்பட்டி, மெட்டூர் காமலாபுரம் பிரிவு ஊத்துப்பட்டி ஆகிய பகுதியில் கடும் வெயில் வாடி வதைத்து வந்தது.

இப்பகுதி திடீர் வானத்தில் கரு மேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது,
சாலை தெருக்களில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது,
கடந்த ஆண்டில் காமலாபுரம் பிரிவு – செம்பட்டி வரை சாலை விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்தது, அப்போது சாலையின் ஓரத்தில் மழை வடிக்கால் முறையாக அமைக்கப்படவில்லை.

இதனால் நேற்று பலத்த மழை பெய்து தண்ணீர் சக்கையநாயக்கனூர் காளியம்மன் கோவில் முன்பு சலையிலும் குளம் போல தேங்கி நிற்கிறது. மழை தண்ணீர் வடிந்து செல்ல வடிக்கால் அமைக்க வேண்டும் என மக்கள் வலிறுத்தி வருகின்றனர்.
அதேபோல கொடைரோடு சுங்க சாவடி, ராஜதானிக் கோட்டை ராமராஜபுரம், கொடைரோடு , அம்மையநாயக்கனூர் ஆகிய பகுதியில் சிறுமலை அடிவார சுற்றி பலத்த மழை பெய்தது.

கொடைரோடு பகுதியில் பலத்த மழை பெய்த காரணத்தால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியது, விவசாயயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்