மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஸ்ரீ விநாயகர் பக்தர் பேரவை சார்பாக 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நீரேத்தான் இரட்டை விநாயகர் கோவில் முன்பு இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

வளையல் காரதெரு, நீரேத்தான் நடுத்தெரு, மத்திய கூட்டுறவு வங்கி யூனியன் ஆபீஸ் ரோடு, காவல் நிலையம் பேருந்து நிலையம், போடிநாயக்கன்பட்டி ஐயப்பன் கோவில் வல்லபகணபதி கோவில், பொன் பெருமாள் கோவில், ராமநாயக்கன்பட்டி பேட்டை புதூர் சொசைட்டி லாலா நகர் தாதப்ப நாயக்கன்பட்டி மேட்டு பெருமாள் நகர் ஐயப்பன் கோவில் தாதம்பட்டி வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
வழிநெடுகளும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர் தொடர்ந்து பக்தர்களுக்கு கொழுக்கட்டை சுண்டல் பொரி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வாடிப்பட்டி ஸ்ரீ விநாயகர் பக்தர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.









