• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மழை நீர் வடியாத நிலையில் 50 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் சேதம்..,

ByKalamegam Viswanathan

Sep 16, 2026

​மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளன.

சோழவந்தான் அருகேயுள்ள கருப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்களில் முல்லைப் பெரியாறு பாசனத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரெனக் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்தத் திடீர் மழையினால், கருப்பட்டி நாச்சிகுளம் மேல் நாச்சிகுளம், இரும்பாடி சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியும், பலத்த காற்றில் சாய்ந்தும் சேதமடைந்தன.

முல்லைப் பெரியாறு கால்வாயில் நீர் வரத்து இல்லாத நிலையில் 5000 ஏக்கருக்கு மேல் உள்ள நிலப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் அளவிலேயே நெல் விவசாயம் செய்திருந்தனர் சிலர் கிணற்று பாசனமும் மூலமும் நெல் நடவு செய்து இருந்தனர் இந்த நிலையில் கனமழை காரணமாக நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன இரண்டு நாட்களாகியும் மழைநீர் வழியாததால் நெல் பயிர்கள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசிடம் நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்து பகுதி விவசாயிகள் கூறுகையில்
ஏக்கருக்கு 30,000 முதல் 40,000 வரை செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமாகியுள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதேபோல பயிர் சேதம் ஏற்பட்டதால், இந்த ஆண்டு நகைகளை அடகு வைத்தே சாகுபடிப் பணிகளை மேற்கொண்டிருந்தோம் ஆனால் திடீரென பெய்த கன மழையால் நெருப்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சாய்ந்து காணப்படுகிறது. நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் முழுவதும் அழுகி பெரிய அளவில் சேதம் ஏற்படும் என்றும் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து, தங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.