• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Sep 15, 2026

திருவண்ணாமலையிலிருந்து வந்த கோவில் பணியாளர்கள் சதீஷ் சந்திர சேகர் ,ரமேஷ் ஆகிய ஊழியர்களின் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 5 அரை டன் பூக்களை நாட்களாக கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும்கட்டப்பட்ட மாலைகள் 5 கோபுரங்களிலும் மாலைகளாக தொங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

வெள்ளை நிற சாமாந்தி பூக்கள் மாலைகளாக கட்டப்பட்டு வருகிறது
மேலும் மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் தேன் சாமந்தி பூக்கள் , சிவப்பு நிற விருச்சி பூக்கள்,ஐஸ்வர்யா பூக்கள் என 7 வகை பூக்கள் 5. 5.டன் அளவில் மாலைகளாக கட்டப்படுகிறது,

சாமந்தி பூக்கள் உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஓசூர் வேளாண்மை கல்லூரி பெங்களுரு பகுதிகளில் பயிரிடப்பட்டு பின்னர் திருப்பணிகளுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

திருவண்ணாமலை , சென்னை , திண்டுக்கல் , திருச்சி உள்ளிட்ட பகுதியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து கடந்த மூன்று தினங்களாக மலர்கள் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.