மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் வடக்கு தெருவில் உள்ள அருள்மிகு விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் முதல் நாளான நேற்று இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் கலந்த கொண்ட பெண்களுக்கு விழா குழு சார்பில் எண்ணெய் திரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குழந்தைகள் விநாயகரின் பக்தி பாடல்களை பாடி மனமுருக வேண்டினர்.

தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.









