• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெற்ற 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள்..,

ByKalamegam Viswanathan

Sep 13, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணி மாதத்தின் வளர்பிறை முகூர்த்தம் முன்னிட்டு இன்று 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும், திருமண சுபமுகூர்த்த நாள் என்பதால் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 109 பதிவு செய்யப்பட்ட திருமணம் மற்றும் கோவில் அருகே உள்ள திருமண மண்டபங்களில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

இதனால் திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே பக்தர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.