மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விவேகானந்த கல்லூரியில் திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் கல்லூரி மாணவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வர கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கல்லூரியில் சுமார் 3,000-க்கு மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி விடுதியில் தங்கி உயர் கல்வி படித்து வரும் மாணவர்கள் விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு கல்லூரி பேருந்து நிறுத்தங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி சோழவந்தான் பகுதியில் இருந்து செக்கானூரணி வாடிப்பட்டி மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை காலங்களில் காலை நேரங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலையில் குறைவான பேருந்துகள் இயக்குவதால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே பேருந்தில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏராளமான கல்லூரி மாணவர்கள் ஆட்டோக்கோலிலும் அந்த வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடியவர்களிடம் உதவி கேட்டும் தங்கள் பகுதிக்கு செல்லும்
நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து வசதி இல்லாதது குறித்து பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது வரை நடவடிக்கை எடுக்காத நிலையே உள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுமுறை மற்றும் விழா காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் சோழவந்தான் பகுதியில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.








