தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் கொடைக்கானல் செல்லும் வழியில் பழைய வத்தலகுண்டு பிரிவிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கியில் அரிசி, பருப்பு, ஜூனி, எண்ணெய் போன்றவற்றின் இருப்பை சரிபார்த்து தரத்தை ஆய்வு செய்தார்.

மேலும், ரேஷனில் பொதுமக்கள் ஊழியர்கள் நல்லுணர்வு பேணவேண்டும்… எனவும், குடிமைபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கட்டட.த்தின் தன்மையையும் ஆய்வு செய்த அமைச்சர் பருவமழை காலத்தை எதிர்கொள்ளும் பொருட்டு பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய பொருட்களை தரமாக வழங்க அறிவுறுத்தினார்.

முன்னதாக கொடைரோடு விருந்தினர் மாளிகையில் ஆட்சியர் துர்கா மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அவருடன் பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் கார்த்திகேயன், மண்டல மேலாளர் சிற்றரசு, மாவட்ட தர ஆய்வாளர் மணி பாண்டி, கிட்டங்கி கண்காணிப்பாளர் சிவாஷினி, வட்டவழங்கல்அதிகாரி செல்வி ஆகியோர் உடன் சென்றனர். பின்னர் அமைச்சர் கிட்டங்கி மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தங்கும் அறைகளை, உயர்நிலை தண்ணீர் தொட்டிமற்றும் கிட்டங்கி கழிவறைகளையும் பார்வையிட்டார்.இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.








