• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் ஒருங்கிணைத்த ராயல் எக்ஸ்போ 2026..,

BySeenu

Sep 10, 2026

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை மேலாண்மை கணினி பயன்பாடு மற்றும் தளவாடங்கள் துறை சார்பாக “ராயல் எக்ஸ்போ 2026” எனும் கண்காட்சி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க விழா இந்துஸ்தான் கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன், துணை செயலாளர் .பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..

இதில் , கல்லூரியின் முதல்வர் .பொன்னுசாமி முன்னிலை வகித்தார்..

விழாவில் சிறப்பு விருந்தினர்களான கொடிசியா நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் குமார், அக்ரி இன்டெக்ஸ் துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளரும்,கவிஞருமான ‘தமிழ் இளவல்’ மதுரை வெ. ராமகிருஷ்ணன்,ஆகியோர் கலந து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்..

இதில்,இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் செண்பகவள்ளி மற்றும் துறை தலைவி சபிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

இவ்விழாவில் மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து அதன் மூலம் தங்களுடைய மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் திறனை வெளிப்படுத்தினர்.

இதில் கோவை சார்ந்த பல கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய மேலாண்மை திறனை வளர்த்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘தமிழ் இளவல்’ மதுரை திரு. வெ. ராமகிருஷ்ணன் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் சிறப்பு அமர்வை நடத்தினார்.

கல்வியே சிறந்த ஆயுதம்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நிஜ உலக மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வி மற்றும் திறன்களில் சிறந்து விளங்க மாணவர்களை ஊக்குவித்தார்.