மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 4ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

4ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜனம் நிகழ்ச்சியும் 5-ம் தேதி உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நடைபெற்று இரவு சுவாமி நான்கு ரத வீதிகளில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் ஆறு ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் 6ம் நாளான 9ம் தேதி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெண்கள் சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

அதனைத் தொடர்ந்து பெண் அழைப்பு மாப்பிள்ளை வீட்டார் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்ரீ பாலாஜி பட்டர் மாப்பிள்ளை வீட்டாராகவும் ஸ்ரீ கிருஷ்ண ஹரி பட்டர் பெண் வீட்டாராகவும் இருந்தனர். மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து மங்கல இசை முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர் பெண்கள் அனைவருக்கும் மாங்கல்ய பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாவளி காட்டப்பட்டது.

திருக்கல்யாண விழாவின் உபயதாரர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ராமன் ஆலடி சேர்வை ஆகியோர் செய்திருந்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு தென்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.









