திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (55) பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில், இவர் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக, சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமினில் வெளிய வந்துள்ளார்.

இந்நிலையில், நிலக்கோட்டை அருகே, என்.கோவில்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி உள்ள ரவுடி ராஜா, அந்தப் பகுதியில் உள்ள ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு காவல் துறையினர் சிறப்பு தனி படையுடன், நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் தலைமையில் அவரைப் பிடிக்க என்.கோவில்பட்டி சென்றுள்ளனர். அப்போது ரவுடி ராஜா தப்பி ஓடி உள்ளார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத் பிடிக்க முயன்று உள்ளார். அப்போது அவரை ரவுடி ராஜா அருவாளால் வெட்டி உள்ளார். இதனால் சார்பு ஆய்வாளர் அருண் பிரசாந்த் ரவுடி ராஜாவின் துப்பாக்கியால் காலுக்கு கீழே சுட்டு உள்ளார்.

இதில் ராஜா அந்த பதிவில் உள்ள தோட்டத்து தென்னை மரத்தின் அருகில், தப்பி ஓட முடியாமல் கீழே விழுந்த போது, அவரை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் பிடித்து சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

மேலும், ரவுடி ராஜாவால் வெட்டப்பட்ட சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். நிலக்கோட்டை அருகே ரவுடி சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ரவுடி ராஜா, அவரை பிடிக்கச் சென்ற சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத்தை அருவாளன் வெட்ட முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.








