• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து மாடுபிடி வீரர்கள் இருவர்பலி..!

ByKalamegam Viswanathan

Sep 9, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்தில், பிரபல ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் திருமணம் ஆகாதவர்கள்.

சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களான இவர்கள், பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றாகப் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.

​இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நகரி பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத கனரக லாரி ஒன்றிலிருந்து திடீரெனப் பெரிய இரும்பு பொருள் ஒன்று லாரியில் இருந்து கீழே விழுந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

​இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​இணைபிரியா நண்பர்களான ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் ஒரே நேரத்தில் விபத்தில் உயிரிழந்த சம்பவம், சித்தாலங்குடி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.