• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று கிறிஸ்தவ பொது மக்களால் போற்றி வழிபாடு செய்யப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத் தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா,ஜீவ நீரூற்று பிறப்பு விழா, எஸ்.வி. டி., திருச்சபை விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

கடந்த 29ந்தேதி மதுரை உயர் மறை மாவட்ட பேரா யர் அந்தோணி சவுரிமுத்து தலைமையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினந்தோறும் காலை 6.30 மற்றும் 11.30 மணிக்கு திருப் பலியும், குணமளிக்கும் வழிபாடும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை நற்கருணை ஆராதனையும், மாலை 6 மணிக் குசிறப்பு திருப்பலியும் மறையுரை கருத்துக்கள் வழங்கப்பட்டது. இதன் முக்கிய திருவிழா நேற்று 8ந்தேதி செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா, ஜீவ நீரூற்று பிறப்பு விழா, எஸ்.வி. டி., திருச்சபை விழா ஆகிய முப்பெரும் விழாகூட்டுத் திருப்பலி திண்டுக்கல் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடந்தது.

இரவு 7 மணிக்குவண்ண விளக்குகளுடன் மல்லிகை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுஅரக்கு பாடரில் பச்சை பட்டு உடுத்திய ஆரோக்கிய அன்னையின் தேர் பவனி திருத்தலத்தில் இருந்து தொடங்கி குலசேகரன் கோட்டை பிரிவு, ராமநாயக்கன்பட்டி பிரிவு,சந்தை பாலம், லாலா பஜார்,பஸ் நிலையம்,ஜெமினி பூங்கா, யூனியன் ஆபீஸ் பிரிவு, காவல் நிலையம்,எல் புதூர் பிரிவு போடிநாயக்கன்பட்டி பிரிவு வழியாக மெயின் ரோட்டில் நகர புறச் சாலையில் தேர்பவனி வந்தது. இதில் மதுரை,திண்டுக்கல், தேனி,விருதுநகர், திருநெல்வேலி நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுகைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.

இன்று9ந்தேதி காலை 6.30மணிக்குதிருத்தல அதிபர் ஆரோக்கியசாமி தலைமையில் கொடி இறக்கப் பட்டது.இதன் ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஆரோக்கியசாமி, பங்குத்தந்தைடேவிட் ராஜ், நிர்வாகி ஜோசப் ஆரோக்கியதாஸ்,உதவி பங்கு தந்தை யூ ஜீன் டென்சிங் மற்றும்இருபால் துறவியர்கள் பங்கு மக்கள் அன்பியங்கள் செய்திருந்தனர்.இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீசார் செய்திருந்தனர்.