மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் இறுதிச்சடங்கில் ரோட்டில் வெடி வெடித்ததில் தகராறு இரு தரப்பினர் கிடையாது தகராறு ஏற்பட்ட நிலையில் நடு இரவில் மண்ணெண்ணெய் கொண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக துக்க வீட்டில் கொட்டகை தீ பிடித்து எரிந்தது. சோழவந்தான் பகுதியில் அடுத்து நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்கள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குண்டு வீச்சு சம்பந்தமாக மன்னாதிமங்கலம் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த அழகர் மகன் முத்தையா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கல்லாங்காடு பகுதியில் கருப்பையா என்பவருடைய அம்மா பஞ்சு 73 என்பவர் நேற்று முன் தினம் காலமானார்.

இவருடைய இறுதி சடங்கு நேற்றைய முன் தினம் இரவு நடந்தது. பிணத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் பொழுது ரோட்டில் வெடி வெடித்துள்ளனர். இதை அப்பகுதியில் உள்ள சிலர் எங்கள் பகுதியில் ஏன் வெடி வெடிக்கிறீர்கள் என்று தகராறு செய்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பெரியவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தகராறு ஈடுபட்டவர்கள் கஞ்சா உள்ளிட்ட மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவு ஒரு மணி அளவில் மற்றொரு தரப்பினரை சேர்ந்த சிலர் துக்க வீட்டிற்கு சென்று மண்ணெண்ணெய் குண்டு வீசி உள்ளனர். இதில் துக்க வீட்டிற்கு முன்பாக போடப்பட்டிருந்த கொட்டகை தீப்பிடித்து எறிந்தது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தீப்பிடித்ததை பார்த்து பதட்டத்துடன் எழுந்து வந்து தீயை அனைத்து உள்ளனர் உடனே அருகில் இருந்தவர்கள் என்ன ஏது என்று கூட்டமாக வந்துள்ளனர் அவர்கள் வருவதை பார்த்தவுடன் எதிர்தரப்பைச் சேர்ந்த சிலர்ஓடி உள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்ணெண்ணய்
குண்டு வீசியது. குறித்து விசாரணை செய்தனர். இதில் பெட்ரோல் குண்டு வீசியதாக எதிர் தரப்பைச் சேர்ந்த மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த அழகர் மகன் முத்தையா 25 என்பது தெரியவந்தது. இதன் பேரில் முத்தையாவை போலீசார் கைது செய்தனர். இரு தரப்பினரிடே மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த வாரம் சோழவந்தான் மெயின் ரோட்டில் அதிகாலையில் இரண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது,

கடந்த வருடம் சோழவந்தான் பேருந்து நிலையம் உள்ளே உள்ள செல்போன் கடையில் இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோழவந்தான் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனால் சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








