• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அருகே கல்குவாரியால் அழியும் கிராமம் ..,

ByKalamegam Viswanathan

Sep 9, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அங்கே வந்த சமூக ஆர்வலர் ஞானசேகர் வட்டாட்சியரிடம் பூச்சம்பட்டி, ராமையன்பட்டி பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகள் விதிமுறையை மீறி இரவு பகலாக கற்களை ஏற்றி நீர்வரத்து ஓடையை பயன்படுத்தி கிராமப்புறம் நடுவே செல்வதால் அதில் ஏற்படும் தூசியால், குடிநீர் மாசடைந்தும், பாறைகளில் வெடி வைப்பதால் வீடுகள் விரிசல் அடைந்தும், அதிர்ந்து குழந்தைகள் தூங்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

மேலும் பொது மக்களுக்கு பல்வேறு சுவாச கோளாறுகள், தோள் நோய்கள் ஏற்படுகின்றன,

கனரக லாரிகளில் அதிக அளவு கற்களை ஏற்றி வருவதால் குழந்தைகள், பொது மக்கள் சாலையில் செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

மேலும் கல்குவாரிகளிலிருந்து வெளியேறும் லாரிகள் சட்டத்திற்கு புறம்பாக ஓடை பாதையை ஆக்கிரமித்துள்ளதால் மழை நீர் செல்ல வழியின்றி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது சட்டப்படி கனிம வளத்துறை அமைச்சர் பிரபு நேரில் வந்து ஆய்வு செய்து குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து விதிமுறை மீறி செயல்படும் குவாரிகள் மீது அபராதம் விதித்து எங்கள் கிராமப்புற மக்களை காப்பாற்ற உதவ வேண்டும் எனவும் இனியாவது தமிழக அரசு விவசாயத்தை காப்பாற்றி எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கூறி மனு அளித்து சென்றார்

இது குறித்து ஞானசேகர் அளித்த பேட்டியில்

எங்கள் பகுதியில் 6க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டுவருகிறது,

அதிலிருந்து வெளியேறும் கனரக லாரிகள் நீர்வரத்து ஓடை பாதையை ஆக்கிரமித்து தான் செல்கிறது,

இதனால் நிலத்தடி நீர் குறைகிறது, தூசிகளால் மகசூல் குறைந்து விவசாயம் முற்றிலும் அழிகிறது. குவாரியில் வெடி பொருட்கள் நீரில் கலந்து குடிநீர் மாசடைந்து வருகின்றது.

அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை,

கனிம வளத்துறை அமைச்சர் பிரபு எங்களது பகுதிக்கு நேரில் வந்து கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,

இதுவரை எந்த குவாரிக்கும் அபராதம் விதிக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.

பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் என்பது தான் எங்களது பிரதான கோரிக்கை என்றார்.