• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல் முறையாக சபாநாயகராக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்தது துவக்கமாக இருக்கட்டும். எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Sep 4, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள உச்சப்பட்டி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 7.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவருமான மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்:

ராகுல் காந்தியே விஜயை முதல்வர் ஆக்குவார் என்று எம்எல்ஏ கனிமொழி கூறியது குறித்த கேள்விக்கு:

ஜோசியக்காரர்கள் பேசுவதை சீரியஸ் ஆக எடுக்கத் தேவையில்லை அது ஜோசியக்காரர்களின் ஆருடம் அதைப்பற்றி பேச முக்கியமான விஷயங்கள் பல உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் பொருளாளர் தெளிவுபடுத்தி இருக்கிறார் கட்சியின் நிலைப்பாடு அது இல்லை அது தனிப்பட்ட நபர்களின் கருத்து என்று. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைபாடு தமிழக முதல்வராக விஜய் இருக்க வேண்டும் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அரசு அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். முதல் இலக்காக விஜய் அவர்கள் முதல்வராக வேண்டும் என்பது நடந்து விட்டது, ராகுல் காந்தி பிரதமர் ஆக்குவதற்கு சேர்ந்து பணியாற்றுவோம்.

கச்சத்தீவு விவகாரம் குறித்த கேள்விக்கு:

தமிழ்நாட்டின் நலனுக்காக தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது அப்போதைய இலங்கை இந்தியாவின் ஒப்பந்தம் குறித்து கொடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக வளமையான பகுதி இந்தியாவிற்காக கொடுக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் உள்ளது. இதில் அரசியல் செய்வது சில கட்சிகளின் வேலையாகிவிட்டது காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் இந்திய கடற்படையும் இந்திய வெளியுறவுத் துறையும் நம்முடைய ஒப்பந்தத்தை அமல்படுத்த இலங்கை அரசுடன் கடுமையாக பேச வேண்டும் தாக்குதலை தடுப்பதற்கு கடல் படை உறுதுணையாக இருக்க வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் சொத்துக்களை இலங்கை கடற்கரை பிடுங்கி உள்ளது. ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் இந்த பிரச்சனையை தீர்க்க வைப்போம் இலங்கைக்கு சொல்ல வேண்டிய விதத்தில் தெளிவாக சொல்லவும்.

தற்காலிக பெண் சபாநாயகர் குறித்த கேள்விக்கு:

திராவிடம் பேசுகின்ற கட்சிகள் எல்லாம் 50 வருஷம் ஆட்சியில் இருந்து ஒருமுறை கூட சபாநாயகர் துணை சபாநாயகராக பெண்களை உட்கார வைக்கவில்லை. முதல் முறையாக சபாநாயகராக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்தது என்பது துவக்கமாக இருக்கட்டும் அடுத்து வருகின்ற காலங்களில் தமிழக சபாநாயகராக ஒரு பெண் சகோதரி வர வேண்டும். அதையும் தமிழக முதல்வர் வருங்காலத்தில் செய்வார் என்கிற நம்பிக்கை உள்ளது.

சோழவந்தான் எம் எம் எல்லை ஜல்லிக்கட்டு குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு:

அமித்ஷா அண்ணா திமுகவிற்கு விஷயம் இல்லாமல் போய்விட்டது மக்களுடைய பிரச்சினைகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஆகிவிட்டது அதனால் தான் அண்ணா திமுக அமித்ஷா அண்ணா திமுக மாறிவிட்டது மக்கள் பிரச்சினை குறித்து அவர்களுக்கு பொருட்டு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பிடுங்குவதற்காக மோடி அரசு செய்துள்ள சதி குறித்து கேட்க அவர்களுக்கு திராணி இல்லை. சட்டமன்ற உறுப்பினர் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய வார்த்தையை சட்டமன்றத்திலேயே வாபஸ் பெற்று விட்டார். அதற்கு ஒரு போராட்டம் செய்தால் இதைவிட பெரிய காமெடி என்ன உள்ளது. ஜல்லிக்கட்டு பொறுத்த அளவில் அது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு அதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திருக்கிறோம். நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என சபையிலேயே வாபஸ் பெறப்பட்ட பிறகும் போராடுவது உதயகுமாரின் போக்கு காமெடியாக உள்ளது.

2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை குறித்த கேள்விக்கு:

இடைநிலை மிகவும் முக்கியமான விஷயம். 60,000 கோடி ரூபாய் நகராட்சி துறையில் மட்டும் 30% கமிஷனாக கொடுக்கப்பட்டுள்ளது முந்தைய அரசு. அதனால்தான் இந்த முறை கமிஷன் வாங்காததால் டெண்டர் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது. கமிஷனாக செல்ல வேண்டிய பணம் அரசாங்கத்திற்கு வந்துவிட்டது. இது போன்ற பணங்கள் வந்தால் தான் 2500 ரூபாய் கொடுக்க முடியும் அதற்கான முயற்சிகளை முதல்வர் எடுக்கிறார். அதற்கான நேரத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். 2500 ரூபாய் உடனடியாக கொடுக்க வேண்டும் என கேட்பது மிகவும் வேகமாக உள்ளது.

தமிழக அரசின் மெத்தனை போக்கால் தான் முருகன் சிலை திருட்டு நடந்தது என நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்வி:

நயினார் நாகேந்திரனை பொறுத்த அளவில் அவர் படும் பாடு எனக்கு புரியவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றை பாஜகவை முடித்து வைக்கும் தலைவராக இருக்கப் போகிறார். யார் யாரையோ முடிக்க வேண்டும் என்று கிளம்பிய பாஜக, தன்னை முடிக்க அதிமுகவிலிருந்து ஒருவர் வந்து தலைவராகி தங்களை முடிக்கப் போகிறார் என்கிற கவலையில் பாஜக உள்ளது. முருகனை வைத்து அரசியல் செய்ததால் தான் பாஜக இப்படி உள்ளது. நயினார் நாகேந்திரன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன் எங்கள் அண்ணன் அவர் தெய்வ குற்றங்களை அவர் செய்யக்கூடாது. தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. மக்கள் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என கூறினார்.