• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Sep 1, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கான அமைக்கப்பட்ட நிழற்குடையில் இரும்பிலான இருக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் போதிய பராமரிப்பு வசதி செய்யப்படாததால் இருக்கைகள் சேதம் அடைந்தும் காணாமலும் போய் வருகின்றன. இதனால் பெண்கள் முதியோர்கள் உட்கார முடியாமல் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்