தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் நகர தமுமுக சார்பாக தமுமுகவின் 32 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு 1-9-2026 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் உத்தமபாளையம் பைபாஸ் அருகில் நகர தலைவர் முகமது அசாருதீன் தலைமையில் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் முகமது ரபிக், தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மமக மாவட்டச் செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட பொருளாளர் ஹபிபுல்லா, மாவட்டத் துணைச் செயலாளர் ஹக்கீம், முன்னாள் உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் முபாரக், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி, மாணவரணி செயலாளர் நவீத் இம்ரான், உத்தமபாளையம் நகர தமுமுக செயலாளர் தாவித் ஒலி, பொருளாளர் முகமது ஆசிப், துணைத் தலைவர் அப்பாஸ் மந்திரி, துணைச் செயலாளர் சையது அமீன், கோட்டைமேடு கிளை தலைவர் முபாரக், பிடிஆர் காலனி கிளைச் செயலாளர் ஜியாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொது மக்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.




