• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் தின விழா..,

BySeenu

Aug 31, 2026

கோவை, ஆக.30 கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள்,

பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆசிரமத்தின் நிறுவனர் தின விழா மற்றும் குரு ஜெயந்தி விழா ஆசிரம வளாகத்தில் அமைதியான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் ஆசிரம வளர்ச்சிக்குத் துணைநிற்கும் நன்கொடையாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் மகிழ்விக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து குருஜி ஷிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சமுதாயத்திற்கு உண்மையாகவும், நேர்மையாகவும், அறவழியிலும் தொண்டாற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் தமிழக அரசு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். நற்பணிகளைச் செய்பவர்களை ஊக்கப்படுத்தி மேலும் சிறப்பாகச் செயல்பட வைக்க அரசு ஆதரவளிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள்,
சூலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மற்ற கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள், தொழிலதிபர் சக்திவேல் முருகன், வெற்றி பார்மசி சரவணன், பாரதி அறக்கட்டளை பாரதிராஜா, மற்ற அமைப்புகளை சார்ந்தவர்கள், கணேஷ், பழனிசாமி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.