மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பைபாஸ் சாலை சீனிவாசா காலனியில் ஈசன் ஆட்டோ கன்சல்டிங் என்கின்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ பற்றி எரிய தொடங்கியது இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலை மேலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கருகியது.

தீயணைப்புத் துறையினரின் துரிதமான செயல்பாட்டினால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




