• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முனியாண்டி கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்த கருப்பையா எம்எல்ஏ..,

ByKalamegam Viswanathan

Aug 31, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள சாம்ப காட்சி முனியாண்டி கோவிலில் தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டும் முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தீவிர ரசிகராக இருந்து தற்போது நிர்வாகியாக உள்ள ரோஜா செந்தில் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தினார்.

இரண்டு கிடாய் வெட்டிஅசைவ விருந்து அன்னதானம் தென்கரை முருகன் ஏற்பாடு செய்திருந்து அனைவரையும் வரவேற்றார். அன்னதானத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா வாடிப்பட்டி ஒன்றிய நிர்வாகி தாமு கொரியர் கணேசன் கேபிள் மணி முல்லை சக்தி ஜே சி பி சுரேஷ் வெல்டிங் மாரி வைகை ராஜா ஜெயபிரகாஷ் உமா மாரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சாம்பக் காட்சி முனியாண்டி கோவிலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கருப்பையா எம்எல்ஏவுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.