சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பனைவிதையில் விநாயகர் பொம்மை செய்து கடந்த 2019ம் ஆண்டு முதல் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன்.
இந்த பனைவிதை விநாயகர் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நீர்நிலைகளுக்கும் தீங்கு கிடையாது,

விநாயகர் சதுர்த்தி வழிபாடு முடிந்த பிறகு பொதுமக்கள் அதனை நீர்நிலைகளில் கரைக்கும் போதோ அல்லது தூக்கிபோடும் போது நீர்நிலைகளில் தண்ணீரில் அடித்து செல்லும் போது கறையோரங்களில் ஒதுங்கிடும்போதும் கறைகளில் பனைவிதை விநாயகரை விதைத்து வைப்பதன் மூலம் பனைமரங்கள் உருவாகிட அதிக வாய்ப்பு உள்ளது அழிவின் விளிம்பில் உள்ள நமது மாநில மரமான பனைமரத்தை மீட்டெடுக்கவும் முடியும்.
இவ்வாறாக பசுமை (பனைவிதை) விநாயகரை இலவசமாக வழங்கி வருகிறேன்.
இவண்
G.அசோக்குமார்
பசுமை செயற்பாட்டாளர்
9171870007
8838204662




