• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Aug 30, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் கிராமம் தேவனன் தோப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி ஸ்ரீபால விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ நாகதேவதை ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது இன்று காலை நடைபெற்ற நான்காமாகால யாக பூஜையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹீதியுடன் மகாயாகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து தீர்த்த குடங்களை சுமந்து அர்ச்சகர்கள் கோபுர கலச பகுதிகளுக்கு வந்தனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்காள ஈஸ்வரிக்கு மகா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. செல்லக்குளம் பெருமாள்பட்டி வாடிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை அங்காள ஈஸ்வரிகுல பங்காளிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.