• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அதிகாரத்தால் மக்களை வெல்ல முடியாது அன்பால் பாசத்தால் தான் மக்கள் மனதை வெல்ல முடியும்..,

ByS. SRIDHAR

Aug 30, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழக வெற்றிக்காக மேற்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் தமிழக வெற்றிக்கழக தலைமைக் கழக பேச்சாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் இளம்பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் இந்தியாவிலேயே கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டு காலத்தில் ஆட்சியைப் பிடித்த வரலாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும்தான் அதுவும் ஒரே தலைவர் தமிழக முதல்வர் தான்
அதிகாரத்தால் மக்களின் அன்பை வெல்ல முடியாது ஈர்க்க முடியாது.
அக்கறையால் மட்டும் தான் மக்களின் மனதை ஈர்க்க முடியும்.
அதிகாரத்தால் ஆட்சியை வெல்ல முடியாது தக்க வைக்க முடியாது கட்டுக்குள் வைக்க முடியாது அன்பால் அக்கறையால் பாசத்தால் இதயத்தால் எல்லாருடைய இதயங்களையும் ஈர்த்திருக்கக்கூடிய ஒரே தலைவர் விஜய் தான்.

ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு திமுக ஆட்சி காலத்தில் ஒத்த ரூபாய் கூட ஒதுக்கவில்லை ஆனால் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் இந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே இந்த திட்டத்திற்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி புதுக்கோட்டை விவசாயிகளின் மனதில் பாலை வார்த்து உள்ளார்.

முதல்வர் சட்டசபைக்கு வந்தவுடன் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வணக்கம் கூறுகிறார் சக அமைச்சர்களோடு அமைச்சராக அமர்ந்து சட்டசபை நிகழ்வுகளை ஈடுபடுகிறார் இது வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று.

வான் உள்ளவரை உலகம் உள்ளவரை தமிழகத்தில் முதல்வராக விஜய் இருக்க வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். அதற்கு மேல் அமைச்சர்களும் பலரும் அவர் உயர வேண்டும் (பிரதமராக வருவார் என்று கூறுவதை குறிப்பிட்டு) விரும்புகின்றனர் நல்லது நடக்கும்.

அனைவரும் கான்ஃபிடன்டாக இருப்போம்.

வெளிப்படையான ஊழல் அற்ற ஆட்சியை முதல்வர் கொடுத்து வருகிறார் இந்த தைரியம் முதல்வருக்கு மட்டுமே உண்டு.