நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி பலியான எண்ணிக்கையை 362 ஆக அதிகரித்துள்ளது இது வேதனையின் உச்சமாக இருக்கிறது .288 இந்தியர்கள் இன்னும் காணவில்லை இதனைத் தொடர்ந்து டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அவசியத்தை நமக்கு பாடம் எடுத்து இருக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு சவால்கள் நமக்கு வந்திருக்கிறது. பல்வேறு பாடங்களை நமக்கு கற்பித்து இருக்கிறது சுனாமி போன்ற பாடங்கள் எல்லாம் நான் கற்று இருக்கிறோம் அதை எதிர் கொண்டிருக்கிறோம். கஜா போன்ற புயல்களில் உயிரிழப்பு இல்லாமல் மக்களை பாதுகாத்திருக்கிறோம்
தமிழகத்திற்கு இந்த இயற்கை பேரிடர் எதிர்கொள்கிற சவால்கள் வடகிழக்கு பருவமழையோடு சூப்பர் எல்நினோ அபாயம், குடிநீர் பஞ்சம், மானாவரி பயிர்களுக்கு பாதிப்பு உள்ளிட்டவைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஐரோப்ப நாடுகளை உருக்கி கொண்டிருக்கும்எல்நினோ எனும் வெப்ப அலை தமிழ்நாட்டில் சூப்பர் lஎல்நினோவாக ஒரு மாறி விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் குருவை சாகுபடி பொய்த்து போய்விட்டது, சம்பா சாகுபடியை எதிர்பார்த்து இருக்கிறோம். காவேரியில் நமக்கு உரிய நீர் பெறுவதிலே பல்வேறு சவால்களை தமிழகம் எதிர்த்து வருகிறது.
இப்போது இந்த எல்நினோ என்பது குறிப்பிட்ட கால இடைவெளியில் உருவாகிக் கொண்டிருக்கிறது இதுஒரு இயற்கையான நிகழ்வு பசுபிக் பெருங்கடலில் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் மேம்பட்டத்தில் வெப்பநிலை இயல்பை விட உயர்ந்தால் அது எல்நினோ என்றும், அதுவே வெப்பநிலை இயல்பை விட குறைந்தால் லாஎல்நினோ என்றும் கணிக்கப்படுகிறது

அதாவது பசுமைப் பெருங்கடலில் வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் சாதாரண எல்நினோ அதுவே 1.2 முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் கடும்எல்நினோ அதுவே 1.5 முதல் 1.8 வரை உயர்ந்தால் அது சூப்பர் எல்நினோ என்று கணிக்கப்படுகிறது .
கடல் மட்டத்தின் மீது உள்ள காற்று சூடாகும்போது உலகம் முழுவதும் உள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும் இதனால் காற்று வறண்ட காற்றாக மாறிவிடும் இதனால் எல்நினோ காலத்தில் மழை குறைந்து வறட்சி அதிகமாகும். சில இடங்களிலே கடும் மழை கூட பெய்யும் வாய்ப்பு இருக்கிறது
தமிழ்நாட்டிலே இதற்கு முன்பு சூப்பர்எல்நினோ பாதிப்பு உள்ளதா என்றால் குறிப்புகள் சொல்கிறது 150 ஆண்டுகளுக்கு முன்பாக 1876 ,1877 பழைய மெட்ராஸ் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலையில் இந்தசூப்பர்எல்நினோ ஏற்படுத்தியது அதனுடைய தாக்கம் இருந்தது என்று நமக்கு செய்திகள் சொல்லுகிறது
ஆனால் தற்போது பசிபிக் கடலின் வெப்பநிலை 2 முதல் 2.5 டிகிரி செல்சியஸ் சாத்தியமும் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள இது சூப்பர்எல்நினோ மேலாக செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கணித்திருக்கிறார்கள்
எல்நினோ தற்போது முதல் கியரில் உள்ளது அடுத்து நான்கு மாதங்களில் டாப் கியரில் செல்லும் இதன் காரணமாக குடிநீர் பிரச்சனை, கடும். வெப்பம் அலை இந்த முக்கிய பிரச்சனைகளை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது மக்களும் இதனை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது .

இதே போல கடந்த காலங்களில் கடும் வெப்பமான பிப்ரவரி மாதம் முதல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றும் சுட்டிக்காட்டு பட்டிருக்கிறது அந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சுருக்கமாக எப்படி பாதிப்பு வரும் என்றால் ஓவன்லே வைத்தால் எப்படி வெப்பம் தாக்கம் இருக்குமோ அதுபோல ஒரு வெப்ப தாக்கம் வெப்ப சலனம் தாக்கம் மக்களுக்கு ஏற்படும் என்ற சூழ்நிலையை சுட்டி காட்டி இருக்கிறது.
இதில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் எல்நினோ பாதிக்கப்படும் 122 மாவட்டங்கள் பட்டியலை அறிவித்திருக்கிறார்கள் அதில் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டமும் இடம்பெற்று இருப்பது நாம் கவனத்திலே கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்தால் பவானி, காவிரி ஆறுகளின் நீர்வரத்து குறையும் அதுபோல மேற்கு தொடர்ச்சி மலையின் மழை குறைந்தால் நீர்வரத்து குறைந்து ஆறுகள் வறண்டு போகும் தமிழ்நாடு முழுவதும் கடும் வறட்சி நிலையை நாம் எதிர் கொள்ள வேண்டியது, சில இடங்களில் பெறும் மழை பெய்து பயிர்களை நாசமாக்கும் இது எப்போது வரும் எப்போது போக வேண்டும் என்று யாராவது கணிக்க முடியாது.
ஆனால் இது 1.5 ஆண்டு வரை இந்த நிலையில் நிலை நீடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கிறது .வெயிலையும், காற்றையும் யாரால் தடுக்க முடியும் வறட்சியும் வெள்ளத்தையும் இந்த இயற்கை பேரிடர்கள் யாரால் தடுக்க முடியும் ஆனால் அதை பாதுகாப்பாக எதிர்கொள்ள முடியும்
அதைத்தான் எடப்பாடியாரும்,அம்மாவும் இந்த அன்னை தமிழகத்திற்கு மிக அர்ப்பணித்து அதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். கஜா புயல் போன்ற நேரங்களில் எல்லாம் உயிர் இழப்பு இல்லாமல் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்
மீட்பு நிவாரணம் ஒரு புறம் இருந்தாலும், இதைஎதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தவெக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து இதற்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொண்டு இருக்கிறதா?

வடகிழக்கு பருவமழைக்கு 18 மண்டலங்களுக்கு அதிகாரிகள் அமைச்சர்கள் எல்லாம் இயற்கை சீற்றம் என்பது பேரிடர் மேலாண்மை அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது
தற்போது சட்டமன்றத்தில் முதல்வர் தான் இடமாறி உட்காருவதிலும் முதல்வர் அலுவலக இடம் மாற்றுவதில் தான் அக்கறை செலுத்துகிறார் பருவ மழையில் மாற்றத்தை எந்த அளவிற்கு அக்கறை செலுத்துவாரா என்பது நமக்கு தெரியவில்லை.
சாதனை முதல்வர் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பிரச்னை பேசுகின்ற முதல்வராக தமிழகத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்திருந்தால் புண்ணியமாக போகும்
இது போன்ற இயற்கை சீற்றங்களில் மக்களை பாதுகாப்பதற்காக பேசுகின்ற முதல்வராக அவதாரம் எடுப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.




