• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இளம்பெண்ணுக்கு திடிரென உடல் நல குறைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு…

BySeenu

Aug 28, 2026

கோவை உக்கடம் பகுதியில் இருந்து சோமனூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் இளம் பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு திடீர்னு உடல்நல குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடனடியாக கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளே பேருந்தை கொண்டு சென்று, உடனடியாக அந்த இளம் பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த, சக பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களை பதிவிட்டனர்.

தற்பொழுது அந்த காட்சிகள் வைரல் ஆகி வருகின்ற நிலையில் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக, சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனையில் கொண்டு சேர்த்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் செயல் பாராட்டுக்குரியது என்று அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.