• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் கடும் அவதி..,

ByKalamegam Viswanathan

Aug 28, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தினசரி அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவர் அடைந்து வருகின்றனர் குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக நாளுக்கு நாள் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மாரியம்மன் கோவில் முன்பு இருந்த அனைத்து அடைகளும் அகற்றிய பின்பு பெரிய கடை விதி வரை தற்போது இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் பெரிய கடை வீதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி வட்ட பிள்ளையார் கோவில் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்களுக்கும் தினசரி பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

நெடுஞ்சாலை துறையினரும் கடந்த ஆண்டு ஆக்கிரப்புகளை அகற்றி விட்டு சென்றனர் ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் மீண்டும் கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆகையால் அரசுத்துறை அதிகாரிகள் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.