• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை..,

ByKalamegam Viswanathan

Aug 28, 2026

மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது .

இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது .

சுமார் முப்பது கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான இந்த நிலம் குத்தகைதாரர் வசம் கடந்த 25 வருடங்களாக இருப்பதாக கூறப்படுகிறது .

மேலும் குத்தகைதாரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு உரிய வாடகை எதுவும் செலுத்துவதில்லை அவனியாபுரம் கல்யாணசுந்தரேஷ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் அறநிலைத்துறை அதிகாரிகளும் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் ஆதாரத்தை முறையாக வசூல் கணக்கீடு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்

அவனியாபுரம் கிராமம் வல்லானந்தபுரம் பகுதியில் உள்ள சர்வே எண் 292க்கு கட்டுப்பட்ட 2 ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் முட் புதராகவும் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது .

இங்கு பழைய வாகனங்கள் உபயோக படுத்தாமல் பராமரிக்கப்படாமல் நிறுத்தப்பட்டு அங்கு குடிகாரர்கள் திறந்தவெளி பார் போல் செயல்படுகிறது .

இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் சமூக விரோதிகளின் புகழிடமாகவும் இந்த இடம் உள்ளதால் சுமார் 30 கோடி மதிப்பு மிக்க இந்த இடத்தை கைப்பற்றி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து ருபாய் 30 கோடி நிலத்தை மீட்டு முட் புதர்களை அகற்றி வருவாயை பெருக்கும் விதமாக சீரமைக்க தென்னிந்தியனூர் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் பொதுச் செயலாளர் சிங்கராஜ் வக்கீல் கூறினார்

பலானந்தபுரத்தில் உள்ள 2 ஏக்கர் எழுத்தை மீட்டு அந்த நிலத்தை மக்களுக்கு பயனுள்ள வகையில் கல்யாண மண்டபம் வணிக வளாகங்கள் கட்டி இந்து அறநிலையத்துறை சார்பில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காகவும் வருவாய் பெருக்கிடவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அகில பாரத் அனுமான் சேனா இயக்க மாநில தலைவர் ராமலிங்கம் கூறினார்

மேலும் இது தொடர்பாக அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் தனி அலுவலரிடம் மனு அளித்தனர்