விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (54), இவர் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவர் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் இரண்டு பீரோக்கள் இருந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் மனைவியின் நகைகளை கழட்டி ஒரு இரும்பு பீரோவில் 55 பவுன் நகையை இரண்டு பிரிவாக பிரித்து வைத்துள்ளார்.
அதன் பின்னர் அங்கு செல்லவில்லை.
நேற்று மலையில் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதற்காக மாடியில் வைத்திருந்த அறைக்கு சென்று பீரோவை திறந்து பார்த்த போது அங்கு சேலைகளுக்கு அடியில் இருந்த 35 பவுன் நகை மாயமாகியுள்ளதாக தெரிய வந்தது,
அதன் அருகே மற்றொறு பகுதியில் பெட்டியில் வைத்திருந்த 20 பவுன் நகை மட்டும் இருந்துள்ளது.

மாயமான 35 பவுன் நகை குறித்து செல்வராஜ் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட கை ரேகை நிபுனர்கள், மற்றும் மோப்ப நாய் மற்றும் போலீசார் வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
35 பவுன் நகை மாயமான சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மாடியில் பீரோவில் இருந்த 35 பவுன் நகை மாயமான சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




