மதுரையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நகரத்தார் சொத்தால் நிர்வாகிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.
புணரமைத்து மீண்டும் சமுதாயக்கூடம் போல் அமைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றவுள்ளோம் என தெரிவித்தனர்.
மதுரை தெப்பக்குளம் காவல்நிலையம் 41 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நாட்டுக்கோட்டை நகராத்தார் சங்கத்தின் மண்டபம் மீண்டும் நகரத்தார் சங்கத்தினரிடமே ஓப்படைக்கப்பட்டது. பிரிய மனமின்றி காவல்நிலைய அறையை பார்த்தபடி கவலையோடு சென்ற காவல் ஆய்வாளர் தெப்பக்குளம் பகுதியிலயே தெப்பக்குளம் காவல்நிலையம் உருவாக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.

மதுரையின் சுற்றுலா தளங்களில் ஒன்றான மதுரை மீனாட்சியம்மன் தெப்பக்குளம் பல ஆண்டுகள் பழமையானது. இதன் கிழக்கு பகுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தினருக்கு சொந்தமான நூற்றாண்டு பழமையான மண்டபம் செயல்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்திற்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. இந்த மண்டபத்தை சுற்றிலும் ஆலமரம் என பழமையான மரங்கள் பறவைகள் சத்தத்துடன், தெப்பக்குளத்திற்கே எதிரே இயற்கையான சூழிலில் அமைந்திருந்தது. 41 ஆண்டுகளாக தெப்பக்குள பகுதியில் தெப்பக்குளம் காவல்நிலையம் செயல்பட்டுவந்ததால் தெப்பக்குளத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். இந்நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுபடி தெப்பக்குளம் காவல்நிலையம் காலி செய்யப்பட்டதோடு, நாட்டுக்கோட்டை நகராத்தார் சங்கத்தினரிடமே மண்டபம் சாவி ஒப்படைக்கப்பட்டது. தற்காலிகமாக தெப்பக்குளம் முனிச்சாலை பகுதியில் உள்ள மாநகராட்சி பழைய கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. சுற்றுலா தளமாக உள்ள தெப்பக்குளம் மற்றும் மாரியம்மன் கோவில் முத்தீஸ்வரர் கோயில் என எப்போதும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் நடமாட்டம் உள்ள பகுதியில் தெப்பக்குளம் காவல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் அதற்கான சாவியை நாட்டு கோட்டை நகரத்தார் சங்கத்தினரிடமே ஆய்வாளர் விதுன் குமார் வழங்கினார். அப்போது காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நகரத்தார் சங்கத்தினர் சால்வை அணிவித்து நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

புணரமைத்து மீண்டும் சமுதாயக்கூடம்
41 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தெப்பக்குளம் காவல் நிலையம் தனது இயற்கையான சுற்றுச்சூழலை கடந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்த நிலையில் தெப்பக்குளம் ஆய்வாளராக பணிபுரிந்த விதுன் குமார் தான் பணியாற்றிய காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது. கவலையோடும் காவல் நிலைய கட்டிடத்தை பார்த்தபடி புறப்பட்டு சென்றார். இயற்கையான காற்று எப்போது மக்களுடன் தொடர்பில் இருப்பது என மக்களுடைய நண்பராக இருந்தோம் என கூறியபடி புறப்பட்டார். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தரும் சுற்றுலா பகுதியாகவும், முக்தீஸ்வரர் மற்றும் மாரியம்மன் கோவில் போன்ற பல்வேறு ஆன்மீக தளங்கள் உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தெப்பக்குளம் காவல் நிலையத்தை தெப்பக்குளம் பகுதியிலயே அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேசிய நகரத்தார் சங்கத்தினர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத்தார் சங்கத்திற்கு சொந்தமான மண்டபம் மீண்டும் காவல் ஆய்வாளர்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை புணரமைத்து மீண்டும் சமுதாயக்கூடம் போல் அமைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றவுள்ளோம் என தெரிவித்தனர்.





