• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

துடியலூரில் 3-வது கிளையைத் தொடங்கிய ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ்..,

BySeenu

Aug 24, 2026

கோவையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி நிறுவனமான ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ் , தனது 3-வது கிளையை கோவை துடியலூரில் தொடங்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு மதிப்புசார் கல்வி மற்றும் முழுமையான கற்றல் அனுபவத்தை வழங்கி வருகிறது.

துடியலூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிளையை ஒயிட் ஈகிள் பப்ளிக் ஸ்கூலின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சசி ராஜ்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒயிட்மைண்ட்ஸ் குழும பிரீஸ்கூல்களின் நிர்வாக இயக்குநர் பிரவீன் குமார், ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ் இயக்குநர் கீர்த்தனா மற்றும் துடியலூர் ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல் உரிமையாளர் ப்ரீத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸின் பிரதான கிளை வரதராஜபுரத்திலும், உரிமையாளர் கிளை நேரு நகரிலும் செயல்பட்டு வருகின்றன. தற்போது துடியலூரில் 3-வது கிளை தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தரமான ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கில் நிறுவனம் தனது விரிவாக்கப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

தரமான மற்றும் மதிப்புசார் ஆரம்பக் கல்வியை கோவை மற்றும் தமிழகம் முழுவதும் அதிகமான குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் கொண்டு செல்வதே எங்களது நோக்கம் என்று ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ் இயக்குநர் கீர்த்தனா பிரவீன் குமார் தெரிவித்தார்.

மேலும், கோவை மற்றும் தமிழகம் முழுவதும் ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸின் கிளைகளை விரிவுபடுத்தும் வகையில், கல்வித்துறையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களை பிரான்சைஸ் பார்ட்னர்களாக இணைந்து செயல்பட நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.