• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காலிப்பணியிடங்களால் பணிச்சுமை: மின்வாரிய ஊழியர்கள் அவதி..,

ByKalamegam Viswanathan

Aug 22, 2026

மதுரை, பசுமலை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களால் பணிச்சுமை அதிகரிப்பதாகப் பணியாளர்கள் கூறுகின்றனர். மதுரை, பசுமலை மின்வாரிய பிரிவு அலுவலகம் திருநகரில் செயல்பட்டு வருகிறது.

இதன் கட்டுப்பாட்டில் திருநகர், தேவி நகர், நெல்லையப்பபுரம், பாலசுப்பிரமணிய நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருக்கின்றது. இங்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் பல மாதங்களாகக் காலியாக உள்ளன. இதனால் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பல்வேறு முக்கிய பணிகள் நடைபெறாமல் தேக்கமடைவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, உதவி பொறியாளர் ஆய்வு நடத்த வேண்டிய பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் இங்கு பலருக்கும் பணிச்சுமை அதிகரித்து இருப்பதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழக மின் துறை அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.