• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாலிவுட்டில் கால் பதிக்கிறார் அமலா பால்!

தென்னிந்திய திரை உலகில், பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்தவர் அமலா பால்! தற்போது இவர் நடித்த தெலுங்கு வெப்சீரிஸ் ‘குடியடமைத்தே’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது! தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் அமலா பால், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்!

இந்நிலையில் முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்குகிறார் அமலாபால்! இவரது, நடிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது. இது, 1970-80களில் பிரபலமான பாலிவுட் நடிகை பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சித் ஹி சஹி வெப் சீரிஸ் ஆகும்!

பாபி கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை மகேஷ் பட் உருவாக்கியுள்ளார். இதில் வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ரஞ்சிஷ் ஹி சஹி படத்தின் டீசர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது!