• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கட்டுப்பாட்டை இழந்து குளிர்பானம் ஏற்றி வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்து..,

ByKalamegam Viswanathan

Aug 18, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரியம் பகுதியில் இருந்து ஒரு லாரி குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் அதே பகுதியில் இருந்து மற்றொரு லாரியும் திருமங்கலம் நோக்கி சென்றது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அருகே நான்கு வழிச்சாலையில் இருலாரியும்முந்தி செல்வதில் ஒருவருக்கொருவர் இடைவெளி விடாமல் டிரைவர்கள் போட்டிபோட்டு ஒட்டி சென்றதாககூறப்படுகிறது. இந்த நிலையில் கூத்தியார்குண்டு பிரிவில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து குளிர்பானம் ஏற்றி வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

அதில் டிரைவர் படுகாயமடைந்தார். இதனையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன நெரிசல் ஏற்பட்டதுஇதே சமயம் மற்றொரு லாரி உரிய இடத்தை விட்டு திருமங்கலம் நோக்கி சென்றது.

இது தொடர்பாக தகவறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து காயமடைந்த டிரைவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.