மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் செல்வகுமார் துணை தலைவர் லதா கண்ணன் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் சுகாதார ஆய்வாளர் ஜெஸ்சி பணியாளர்கள் சோனை பூவலிங்கம் பாலமுருகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






