• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ஹைலெவல் “பிளாட்பாரம்” அமைக்கும் பணி..,

ByKalamegam Viswanathan

Aug 12, 2026

திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ரூ 1.50 கோடியில் பயணிகள் வசதிக்காக ஹைலெவல் “பிளாட்பாரம்” அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள கிழக்கு பகுதியில் உயரமும் அகலமும் கொண்டு 570 மீட்டர் நீளத்திற்கு ஹைலெவல் பிளாட் பாரம் அமைந்து உள்ளது.

இதனையொட்டி மதுரை- செங்கோட்டை உள்ளிட்ட பயணிகள் ரெயில்களில்வரக் கூடிய முதியவர்கள் குழந்தைகள் கர்ப்பினி பெண்கள் ரெயிலில் இருந்து இறங்கி செல்லுவதற்கு 570 மீட்டர் நீளம் உள்ளபிளாட்பாரம் பயன் உள்ளதாக உள்ளது. இதே சமயம் டிக்கெட் எடுக்கும் இடம் அமைந்துள்ள ரெயில்வே நிலையத்தின் மேற்கு பகுதியில் சுமார் 414 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பிளாட் பாரம் இருந்து வந்தது. இதனால்திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தின் மேற்கு பகுதியில் பயணிகள் ரெயில் நின்று செல்லும் போதுமுதியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்லாது இளைஞர்கள்,இளம் பெண்கள் கூட ரெயிலை விட்டு இறங்கி செல்லுவதில் மிகுந்த சிரமத்தில்அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனால் பிளாட்பாரத்தின் நீளத்தை நீடிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வலியுறுத்தி வந்தனர். அதனை ” “பிளாட்பாரம்” அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரெயில் வே நிலையம் அமைந்துள்ள மேற்கு பகுதியில் ரூ 1.50 கோடியில் 5.5. மீட்டர் அகலத்தில் 76 மீட்டர் நீளத்திற்கு ஹைலெவல் பிளாட்பாரம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதே போல ரெயில்வே நிலையத்தின் கிழக்கு பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் 80 மீட்டர் நீளத்திற்கு 5.5. மீட்டர் அகலத்திற்கு பிளாட் பாரம் அமைக்கப்பட உள்ளது. ரெயில் நிலையத்தின் இருபுறமும்
570 மீட்டர் பிளாட்பாம்

ஆஞ்சநேயர் 80 மீட்டர் நீளம் அகலம் 5.5 76 மீட்டர் 5.5 அகலம் ஹைலெவ் பிளாட்

பழையது 414 மீட்டர் பிளாட்பாரத்தின் நீளம்நீட்டிக்கும் பணி முடியும்பட்சத்தில் இனி வரும் காலங்களில் பயணிகள் ரெயிலை விட்டு இறங்கி சிரமம் இன்றி செல்லுவார்கள்.