• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்..,

BySeenu

Aug 10, 2026

கோவை ஸ்டேன்ஸ் பள்ளி’ (Stanes ICSE/ISC School) சார்பில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கின.

இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 10, 11) நடைபெறவுள்ள இப்போட்டிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த ஏ, பி, சி மற்றும் டி (Zones A, B, C & D) ஆகிய மண்டலங்களிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நிகழ்ச்சியில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய டாக்டர் ஜெயக்குமார் ஸ்டானியட், நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

மேலும், ஸ்டேன்ஸ் ICSE பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயபிரகாஷ், ஸ்டேன்ஸ் ஏஜ மேல்நிலைப் பள்ளி முதல்வர் P.A. ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் CBSE பள்ளி முதல்வர் எலின் ஜெத்ரோ மற்றும் ஸ்டேன்ஸ் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, மண்டல அளவில் சாதனைகள் படைக்க இப்போட்டி ஒரு சிறந்த தளமாக அமையும். ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இத்தடகளப் போட்டிகள் நாளை மாலை நிறைவடைகின்றன.