பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி தனிநபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். எழுத்தர் ஜெயபிரகாஷ் தரப்பிலும் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு இன்று வந்தது.
அரசு தரப்பில், “விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் காலை 10.30 மணிக்கு நான் காவல் நிலையம் சென்றேன். விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன்” என தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், “மினிஸ்சில் இடம் பழனி மடத்திற்கு சொந்தமானது. அதனை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்பது தொடர்பான குறிப்புகள் இருந்தும் எப்படி பதிவு செய்தார்? என கேள்வி எழுப்பப்பட்டது. மனுதாரர் தரப்பில், “பொறுப்பு பதிவாளராக சென்றதால் விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது” என தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.




