• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ள கிராம மக்கள்..,

ByP.Thangapandi

Aug 5, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கண்மாய் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது.,

இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயகவும் இப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகிறது.,

இந்நிலையில் சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர் போல் காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் மாதரை கிராமத்தைச் சேர்ந்த 58 கிராம பாசன கால்வாய் சங்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று ஜேசிபி இயந்திரம் மூலம் சீமை கருவேலம் மரங்களை அகற்றி சீரமைக்கும் பணியினை தொடங்கியுள்ளனர்.,

இதில் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் சங்க நிர்வாகிகள் மற்றும் மாதரை கிராம 58 கிராம பாசன கால்வாய் சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.,