• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

“ஃபேர்ப்ரோ 2026” வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா..,

BySeenu

Aug 5, 2026

கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய சொத்துக் கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா” ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்து கோவை கிரெடாய் தலைவர் அரவிந்த் குமார் செயலாளர் சஞ்சனா விஜயகுமார், பொருளாளர் மற்றும் ஃபேர்ப்ரோ 2026 தலைவர் கார்த்திக் குமார் ஆகியோர் கூறுகையில் ஃபேர்ப்ரோவில், நகரின் முன்னணி ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், புகழ்பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்க விரும்புவோர் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், 35-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் வழங்கும் 100-க்கும் அதிகமான குடியிருப்புத் திட்டங்கள் இடம்பெறுகின்றன.

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பாதுகாப்பு வசதியுடன் கூடிய குடியிருப்புகள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள், உயர்தர மனைகள், ஆடம்பர வீடுகள் மற்றும் முதலீட்டுக்கான சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை பார்வையாளர்கள் ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யலாம் என்றனர்.

மேலும், முன்னணி வங்கிகளும் இக்கண்காட்சியில் பங்கேற்பதால், வீட்டுக் கடன் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கவும், உடனடி நிதி ஆலோசனைகளைப் பெறவும், தங்களது தேவைக்கு ஏற்ப சிறந்த கடன் திட்டத்தைத் தேர்வு செய்து சொத்து வாங்கும் முடிவை எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கண்காட்சி நடைபெறும் மூன்று நாள்களிலும் மட்டுமே வழங்கப்படும் பிரத்யேக ஃபேர்ப்ரோ சலுகைகள், வீடு வாங்குவோருக்கு கூடுதல் பலனளிக்கும் என தெரிவித்துள்ளனர்.

80-க்கும் மேற்பட்ட உறுப்பினர் கட்டுமான நிறுவனங்களை கொண்டுள்ள கோவை கிரெடாய், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட தனியார் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களின் பெரும்பாலான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. திட்டமிட்ட நகர வளர்ச்சியை ஊக்குவித்தல், நெறிமுறை சார்ந்த கட்டுமான நடைமுறைகளை மேம்படுத்துதல், அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் மற்றும் ஃபேர்ப்ரோ போன்ற நிகழ்வுகள் மூலம் வீடு வாங்குவோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.