• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

ByKalamegam Viswanathan

Aug 1, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில் 2.8.26.அன்றுகாலை11மணிக்கு நடைபெற உள்ளது அரிமா சங்க புதிய தலைவராக 3வது முறையாக சோழவந்தான் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் பொறுப்பேற்க உள்ளார்.

செயலாளராக ராசி ஸ்டுடியோ கண்ணனும் பொருளாளராக ஆனந்தும் பதவிஏற்க உள்ளனர் புதிய நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியை அரிமா மணிகண்டனும் அரிமா சங்கத்தில் இணையும் புதிய உறுப்பினர்களை அரிமா செல்லப்பாண்டியன் அவர்களும் சேவை திட்டங்களை அரிமா சசிகுமாரும் தொடங்கி வைக்க உள்ளனர்.

பதவியேற்பு விழாவில் முதன்மை நிர்வாகிகள் பிரேமா செல்லபாண்டி அருண் ஜோதி ரமேஷ் சுப்பையா மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தில் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்